Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லண்டனில் மாபெரும் ஓரினச்சேர்க்கையாளர் பேரணி!

In
Updated: 08:36 GMT, Jul 8, 2017 | Published: 08:13 GMT, Jul 8, 2017 |
0 Comments
1354
icon_com
This post was written by : Sylviya
09

மத்திய லண்டனில் இன்று (சனிக்கிழமை) மாபெரும் ஓரினச்சேர்க்கையாளர் பேரணி ஒன்று நடைபெறவுள்ளதாகவும் அதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடாவருடம் நடத்தப்படும் குறித்த பேரணி, இம்முறை 45 ஆவது முறையாக நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஓரினச்சேர்க்கை சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டதை கொண்டாடும் வகையிலேயே இந்த பேரணி வருடாந்தம் ஒழுங்கமைக்கப்படுகின்றது.

குறித்த பேரணி, போர்ட்லன்ட் பளஸ் எனும் இடத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு ஒக்ஸ்ஃபோர்ட் சர்கஸ் மற்றும் ரீஜன்ட் ஸ்ரீற் ஆகிய பகுதிகளுடாக சென்று வைட்ஹாலை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் வானவில்லின் நிறத்தில் அமைந்த கொடி பறக்கவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படுவது இதுவே முதன் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

09 - 1
Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg