Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விரைவில் வெளிவருகின்றது டாடாவின் புதிய நெக்சன் கார்

In வணிகம்
Updated: 10:56 GMT, Jul 8, 2017 | Published: 08:47 GMT, Jul 8, 2017 |
0 Comments
1084
icon_com
This post was written by : Elakkiya
201707081436036291_Tata Nexon 1._L_styvpf

டாடா மோட்டோர்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்சன் கார் எதிர்வரும் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாடா நிறுவனத்தை பொறுத்த வரையில்  இந்த ஆண்டின் மூன்றாவது வெளியீடாக இது அமைந்துள்ளது.

ஏற்கனவே ஏழு பேர் அமரக்கூடிய ஹெக்சா மற்றும் சப்காம்பாக்ட் செடான் டிகோர் ஆகிய வாகனங்களை டாடா மோட்டோர்ஸ் வெளியிட்டிருந்தது. இவற்றைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டின் மூன்றாவது வெளியீடாக நெக்சன், வெளியாகவுள்ளது.

நெக்சன், கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவில் எண்ணக்கரு மாதிரியாக (concept)   அறிமுகம் செய்யப்பட்டு 2016 ஆம் ஆண்டு விழாவில் தயாரிப்பு காராக அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.  இதன் அதிநவீன வடிவமைப்பு அனைவரும் விரும்பும் வகையில் அமைந்திருக்கும் என்று கூறப்படுகின்றது.

உட்பக்க வடிவமைப்பில் அதிக இட வசதியுடன் கூடிய புதிய வடிவமைப்புகளை நெக்சன் கொண்டுள்ளது. அதன்படி மிதக்கும் திரை மற்றும் டிரைவ் மோட்கள் காரில் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சங்களாகியுள்ளது. மோட்டார் பிரிவுகளில் நெக்சன் 1.5 லீட்டர் டீசல் இயந்திரத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg