Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜப்பான் பிரதமரைச் சந்தித்தார் பிரித்தானிய பிரதமர்

In
Updated: 12:50 GMT, Jul 8, 2017 | Published: 12:08 GMT, Jul 8, 2017 |
0 Comments
1204
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
abe n may

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

ஜேர்மனியின் ஹாம்பேர்க் நகரில் இடம்பெற்றுவரும் ஜி20 மாநாட்டில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இரண்டாம் நாள் அமர்வின் போது இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

2015ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்தை தடுக்கும் வகையிலான சூழல் பாதுகாப்பு தொடர்பாக, பரிஸில் இடம்பெற்ற மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் விலகியுள்ள நிலையில் ஜி20 குழுவில் அங்கம் வகிக்கும் நாட்டின் தலைவர்கள் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த, இணைந்து செயற்பட வேண்டும் என இரு நாட்டுத் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை கடந்த ஏப்ரல் மாதம் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில், வட கொரியாவினால் மேற்கொள்ளப்படுகின்ற அணு ஆயுதப் பரிசோதனை உலக அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் என்ற வகையில் அதனை கட்டுப்படுத்த சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மே, ஜப்பான் பிரதமர் அபேக்கு வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பித்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg