Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளி கைது

In இந்தியா
Updated: 05:53 GMT, Jul 9, 2017 | Published: 05:52 GMT, Jul 9, 2017 |
0 Comments
1277
icon_com
This post was written by : Elakkiya
arrest-small75911

மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியை உத்தரபிரதேச மாநில பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

1993 ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட காதர் அஹமட் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் பொலிஸாரும் உத்தரபிரதேச மாநில பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸாரும் இணைந்து உத்தரபிரதேச மாநில பிஜினூரில் நஜிபாபாத் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) காதர் அஹமட்டை கைது செய்தனர்.

பொலிஸ் பதிவுகளின் பிரகாரம் மும்பை குண்டு வெடிப்புடன் தொடர்புடைய டைகர் மெமோன் என்பவருக்கு காதர் அஹமட் ஆயுதங்களை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1993 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் திகதி இடம்பெற்ற இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்ததுடன் 713 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களில் 100 பேரை மும்பை நிதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg