Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவின் தீர்மானம் குறித்து மனம் திறந்தார் பிரதமர் மே

In
Published: 07:05 GMT, Jul 9, 2017 |
0 Comments
1348
icon_com
This post was written by : Sylviya

பரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக் கொண்டமையானது தன்னை வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் நேற்று (சனிக்கிழமை) நிறைவடைந்த ஜி – 20 உச்சிமாநாட்டின் நிறைவில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியமையின் பின்னர், பல உலக நாடுகள் பிரித்தானியாவுடன் இருதரப்பு வர்த்தக உறவுகளை பேண இணக்கம் தெரிவித்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை, ஜி – 20 உச்சிமாநாட்டின் நிறைவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பரிஸ் காலநிலை உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகி விட்டது எனவும் ஏனைய  நாடுகள் குறித்த ஒப்பந்தத்தை ஏற்று நடவடிக்கைகள் மேற்கொள்ள உடன்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg