Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மொனாகோ அணியின் தாமஸ் லெமரை வாங்க தீவிரம் காட்டும் அர்சனல் அணி!

In உதைப்பந்தாட்டம்
Updated: 06:07 GMT, Jul 10, 2017 | Published: 06:07 GMT, Jul 10, 2017 |
0 Comments
1269
This post was written by : Anojkiyan

இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் விளையாடும் அர்சனல் அணி, மொனாகோ அணியின் தாமஸ் லெமரை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

இதற்காக அவருக்கு 45 மில்லியன் பவுண்ஸ்கள் விலையை நிர்ணயித்துள்ளது. ஆனால் இதற்கு தாமஸ் லெமர் தரப்பில் எவ்வித முடிவும் தெரிவிக்கப்படவில்லை.

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் அரையிறுதி வரை முன்னேறிய அணி மொனாகோ. அரையிறுதியில் யுவான்டஸ் அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது. ஆனாலும் இதில் சிறந்த முறையில் விளையாடிய தாமஸ் லெமரை வாங்க அர்சனல் அணி, தீவிரம் காட்டி வருகின்றது.

அர்சனல் அணி, கடந்த வாரம் லயன் அணியில் இருந்த அலெக்ஸாண்டர் லெய்செட்டை 52.7 மில்லியன் பவுண்ஸ்கள் கொடுத்து வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg