Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

In இந்தியா
Updated: 11:09 GMT, Jul 10, 2017 | Published: 11:02 GMT, Jul 10, 2017 |
0 Comments
1188
This post was written by : Kemasiya

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் நகுகம் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய ராணுவத்தினர் நேற்று தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் இந்திய ராணுவத்தினரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

தீவிரவாதிகள் காட்டுப் பகுதி ஒன்றில் ஒளிந்திருந்து தாக்குதல் நடத்தினர். இன்று காலை வரை இரு தரப்பினரிடையேயான துப்பாக்கிச் சூடு தொடர்ந்தும் இடம்பெற்றது. இந்திய ராணுவத்தினர் தீவிரவாதிகள் இருந்த பகுதியை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில் தாக்குதல் சம்பவத்தில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதோடு, தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியும் முறியடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், நாவுகம் செக்டாரில் நேற்று இரவு சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருந்தது தெரியவந்தது. பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றதை அடுத்து, தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டதன் மூலமே அவர்களை முடக்க முடிந்ததாக குறித்த ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg