Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Published: 16:01 GMT, Jul 10, 2017 |
0 Comments
1273
icon_com
This post was written by : Sivaguru Siva
5c1d4f286df9aaa3911c454e95af48611ffbfa46a039624c6f0c149611bfcf38

பரிஸ் நகரில் கடந்தஇரவு 54 மில்லி மீற்றர் மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. இதனால் நகரிலுள்ள 20 நிலக்கீழ் தொடருந்து நிலையங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கும்ஏற்பட்டது.

இதனால் நகரில் இன்று காலை நிலக்கீழ் தொடருந்து போக்குவரத்தில் சிரமங்கள் ஏற்பட்டன.

1995 க்குப் பின்னர் சொற்பநேரத்தில் பரிஸ்நகரில் அதிகமாக பொழிந்த மழைவீழ்ச்சியாகவும் இது பதிவுபெற்றுள்ளது.

சுராசரியாக 27 நாட்களுக்கு பொழியவேண்டிய மழை ஒரேயிரவில் கொட்டித்தீர்த்தமை குறிப்பிடத்தக்கது.

_96873748_mediaitem96873745

கடந்தமாதம் லண்டன் கிரென்பெல் அடுக்குமாடிக்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 255 பேர் உயிர்தப்பிய லண்டன் பெரும்பிராந்திய காவற்துறை இன்று நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட தீவிரபுலனாய்வுகளின்படி  தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் மேற்படி அடுக்குமாடிக்குடியிருப்பில் 350 பேர் இருந்ததாக குறிப்பிடும் காவற்துறை இதில் 80 பேர் பலியாகியிருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

_96868351_gtrumpjr

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்பின் மகன் கடந்தவருடம் ரஸ்ய சட்டவாளர் ஒருவரை தான் சந்தித்ததை தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். எனினும் மேற்படி சட்டவாளரான நத்தாலியா பலனுள்ள விபரங்கள் எதனையும் தனக்கு வழங்கவி;ல்லையெனவும் யூனியர் டொனால்ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஸ்ய தலையீடு இருந்ததா என்பது தொடர்பான விசாரணைகள் தற்போது அமெரிக்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

_96874125_hambgettyblockfire7jul

கடந்தவாரம் ஜேர்மனியில் இடம்பெற்ற ஜி;-20 மாநாட்டுக்கு எதிர்ப்புத்தெரிவித்து ஹம்பேர்க் நகரில் நடந்த வன்முறைகள் தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.

ஜி;-20 மாநாட்டை எதிர்த்து அதிதீவிர இடதுசாரி உறுப்பினர்கள் செய்த இந்த வன்முறைகளில் சுமார் 500 காவற்துறையினர் காயமடைந்ததுடன் சொத்துக்களுக்கும் பெரும் சேதம் விளைவிக்கபட்டது.

இந்தநிலையில் ஐரோப்பாவில் உள்ள அதிதீவிர இடதுசாரி உறுப்பினர்கள் தொடர்பான தரவுகள் காவற்துறையினரிடம் இருந்தால் இவ்வாறான வன்முறைகளை தடுக்ககூடுமென ஜேர்மனிய அரசியல்வாதிகள் கருதுகின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg