Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டுமினியின் மோசமான துடுப்பாட்டத்தால் டு பிளிசிஸ் கடும் அதிருப்தி!

In கிாிக்கட்
Published: 05:22 GMT, Jul 12, 2017 |
0 Comments
1305
icon_com
This post was written by : Anojkiyan
dum

மோசமான துடுப்பாட்டத்தால் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள தென்னாபிரிக்கா அணியின் துடுப்பாட்ட வீரர் ஜே.பி டுமினி குறித்து, டெஸ்ட் அணியின் தலைவர் டு பிளிசிஸ் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஜே.பி. டுமினி, முதல் இன்னிங்சில் 15 ஓட்டங்களும், 2வது இன்னிங்சில் 2 ஓட்டங்களும் எடுத்தார்.

கடந்த 8 இன்னிங்சில் 40 ஓட்டங்கள் எடுத்து விமர்சனத்துக்குள்ளான டுமினி, இந்த போட்டியிலும் சோபிக்காததன் காரணமாக காரசாரமான விமர்சத்துக்குள்ளாகியுள்ளார்.

இந்நிலையில், இவரது மோசமான துடுப்பாட்டம் குறித்து டு பிளிசிஸ் கூறுகையில், ”அணிக்கு ஒரு வீரரின் ஓட்டங்கள் தேவை என்பதை சொல்லக்கூடிய முதல் வீரராக டுமினி உள்ளார். மற்ற வீரர்ளுக்கும் இதிலிருந்து மாற்றமில்லை.

டுமினி களமிறங்கும் இடத்தில் அவர் தகுதியானவர்தான். சிறப்பாக துடுப்பெடுத்தாடவே விரும்பினார். அணிக்காக மைதானம் இறங்கி சிறப்பான ஓட்டங்கள் அடிக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் விரும்புவார்கள். ஆனால், கடைசி நாளில் ஓட்டங்கள் எடுத்திருக்க வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்” என கூறினார்.

லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில், இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg