Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் windows தொலைபேசியில் சில apps நிறுத்தப்படுகின்றது

In தொழில்நுட்பம்
Updated: 11:01 GMT, Jul 12, 2017 | Published: 11:01 GMT, Jul 12, 2017 |
0 Comments
1164
icon_com
This post was written by : Kemasiya
lumia-640-xl-lte-1

windows (வின்டோஸ்) தொலைபேசிகளில் வட்சொப், மெசன்ஜர் உட்பட சில apps அண்மையில் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து மீண்டும் சில apps  நிறுத்தப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மைக்ரோ சொப்ட்(Microsoft) நிறுவனத்தின் windows 8.1 இயங்கு தளம் கொண்டு இயங்கும், smart  தொலைபேசிகளுக்கான அப்டேட்களை அதிகார பூர்வமாக நிறுத்திக் கொள்வதாக அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி 80சதவீதமான windows போன்கள் 8.1 இயங்குதளம் கொண்டவையாகும். இனி எவ்வித அப்டேட் செக்கிறியூட்டி பேச் பக் ஃபிக்ஸ் windows போன் 8.1 அல்லது அதற்கு பழைய இயங்குதளங்களை பயன்படுத்தவோர் தங்களது சொந்த விருப்பத்தில் தொடர்ந்தும் பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக லுமியா 1520, லுமியா 930, லுமியா 830 மற்றும் லுமியா 735 மாடல்களில் windows 8.1 இயங்குதளத்தை தொடர்ந்து windows 10 தொலைபேசி அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனினும் பெரும்பாலான சாதனங்களில் இந்த அப்டேட் வழங்கப்படவில்லை என்றும், பெரும்பாலானோர் அப்டேட் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

windows phone 8 அல்லது windows phone 7 இயங்குதளங்களுக்கான அப்டேட்கள் முறையே ஜனவரி 2016 மற்றும் ஒக்ரோபர் 2014-ம் ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும்பாலான windows தொலைபேசி இயங்கு தளங்களுக்கு வட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட்டது. இதேபோல் இன்னும் சில செயலிகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக குறித்த மைக்ரோ சொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg