Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆதரவு பெற்றார் கோபாலகிருஷ்ண காந்தி

In இந்தியா
Published: 05:14 GMT, Jul 13, 2017 |
0 Comments
1103
icon_com
This post was written by : Elakkiya
201707130803531647_Vice-Presidential-election-Gopalkrishna-Gandhi-calls-on-DMK_SECVPF

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக  களமிறக்கப்பட்டுள்ள கோபாலகிருஷ்ண காந்தி தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் செயலர்தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து ஆதரவு பெற்றுள்ளார்.

துணை ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கோபாலகிருஷ்ண காந்தி அறிவிக்கப்பட்டார். 18 எதிர்க்கட்சிகளின் ஆதவை பெற்றுள்ள இவர் நாடுமுழுவதும் தனக்கான ஆதரவை திரட்டும் பணிகளை ஆரம்பித்துள்ளார்.

அதன் ஒருபகுதியாக தமிழகம் சென்ற கோபாலகிருஷ்ண காந்தி தி.மு.க. தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார். கோபாலபுரத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, கனிமொழி, திருச்சி சிவா, உள்ளிட்டோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg