Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பரிஸில் ஜேர்மன் அதிபருக்கு பலத்த வரவேற்பு

In ஐரோப்பா
Published: 09:18 GMT, Jul 13, 2017 |
0 Comments
1207
icon_com
This post was written by : Risha

பரிஸ் எலிசி ஜனாதிபதி மாளிகைக்கு இன்று (வியாழக்கிழமை) விஜயம் செய்த ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோங் தலைமையில் இராணுவ அணிவகுப்புடன் பலத்த வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

கூட்டு பிரான்ஸ்- ஜேர்மன் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் வகையில் ஜேர்மன் அதிபரின் பரிஸ் விஜயம் அமைந்துள்ளது.

அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து பிரான்ஸ் ஜனாதிபதியும், ஜேர்மன் அதிபரும் ஜேர்மன் மொழிக் கற்கைநெறிகள் நடைபெற்றுவரும் இளைஞர் மையமொன்றை பார்வையிடவுள்ளனர்.

அதனை தொடர்ந்து பிரான்ஸ் பிரதமரை சந்திக்கவுள்ள அங்கேலா மெர்க்கல், பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg