Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது !

In இந்தியா
Published: 10:49 GMT, Jul 14, 2017 |
0 Comments
1190
icon_com
This post was written by : Vithushagan
201707141451496567_jammusrinagar-highway-reopened-for-traffic_SECVPF

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெய்த மழையால் சேதமான ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மீண்டும் சீரமைக்கப்பட்டு இன்று(வெள்ளிக்கிழமை) போக்கு வரத்துக்கு திறந்து விடப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூர் மற்றும் ராம்பான் மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையின் பல இடங்கள் பாதிப்பு அடைந்தன.

இதையடுத்து, நெடுஞ்சாலையில் ஆங்காங்கே 200ற்கும் மேற்பட்ட வாகனங்கள் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதற்கிடையே, நெடுஞ்சாலையில் சேதமான இடங்களை ஊழியர்கள் உதவியுடன் சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.

இந்நிலையில், ஸ்ரீநகர் நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று வாகனங்கள் வழக்கம் போல் சென்று வர ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg