Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கதிராமங்கலத்தில் கைதான 10 பேருக்கு தொடா்ந்தும் விளக்கமறியல்

In இந்தியா
Published: 08:09 GMT, Jul 15, 2017 |
0 Comments
1077
icon_com
This post was written by : Sujitharan
201707151049451069_kathiramangalam._L_styvpf

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள, கதிராமங்கலம் கிராம மக்களுக்காக போராடிய போது கைது செய்யப்பட்ட 10 பேரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கதிராமங்கலத்திலிருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை நிரந்தரமாக அகற்றக் கோரி கடந்த 30ஆம் திகதி போரட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், தர்மராஜ், விடுதலை சுடர், ரமேஷ், சந்தோஷ், செந்தில்குமார், முருகன், சுவாமிநாதன், சிலம்பரசன், வெங்கட்ராமன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர் இம்மாதம் முதலாம் திகதி கும்பகோணம் நீதிமனறில் ஆஜா்படுத்தப்பட்ட நிலையில், அவா்களை தொடா்ந்து 14 நாட்களுக்கு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவிற்கு அமைய நேற்றைய தினம் வரையில் தடுப்புக் காவலில் இருந்த 10 பேரும் நேற்றைய தினம் மீண்டும் கும்பகோணம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நேற்றைய தினத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி 10 பேரையும் மீண்டும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவினைத் தொடர்ந்து, அவா்களை பொலிஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு, திருச்சி மத்திய சிறைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். இதன்போது, கைதானவர்கள் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg