Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடாவின் அடுத்த ஆளுநர் நாயகமாக முன்னாள் விண்வெளி வீரர் யூலி பெயட்டின் தெரிவு

In கனடா
Updated: 11:50 GMT, Jul 15, 2017 | Published: 11:50 GMT, Jul 15, 2017 |
0 Comments
1163
This post was written by : Anojkiyan

கனடாவின் அடுத்த ஆளுநர் நாயகமாக முன்னாள் விண்வெளி வீரர் யூலி பெயட்டின் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பினை பிரதமர் ஜஸ்டின் ரூடோ வெளியிட்டார். இந்த ஆண்டில் இறுதியில் அவர் ஆளுநர் நாயகமாக பதவியேற்கவுள்ள நிலையில், கனடாவின் நான்காவது பெண் ஆளுநர் நாயகமாக அவர் திகழ்வார்.

1999ஆம் ஆண்டில் முதலாவது கனேடிய பெண் விண்வெளி வீரராக அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு சென்ற இவர், இரண்டாவது தடவையாக 2009ஆம் ஆண்டிலும் சென்றுள்ளார்.

தற்போதைய ஆளுநர் நாயகத்தின் பதவிக்காலம் கடந்த 2015ஆம் ஆண்டுடன் முடிவடைய இருந்த போதிலும், முன்னைய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரினால் அது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்ட நிலையில், அந்த கால நீடிப்பும் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவுக்கு வரவுள்ளது.

அந்த வகையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் யூலி பெயட்டின் கனடாவின் புதிய ஆளுநர் நாயகமாக பதவியேற்கவுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg