Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்!

In
Published: 10:11 GMT, Jul 15, 2017 |
0 Comments
2934
icon_com
This post was written by : Sylviya
12

சவூதி அரேபியாவில் மரண தண்டனை வழங்குவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் அது தொடர்பில் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் தொடர்பில் கண்காணிக்கும் முன்னணி குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது.

லண்டனை தளமாகக் கொண்டு இயங்கும் குறித்த குழு வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், அண்மையில் 14 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது எனவும் அவர்களிடம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு பெறப்பட்ட வாக்குமூலத்தின் பின்னரே மரண தண்டனை விதிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி 14 பேரும் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட முனைந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே மரண தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் 17 வயது நிரம்பியவர் எனவும் இன்னுமொருவர் கேட்டல் மற்றும் பார்வை குறைபாடு கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மரணதண்டனை விதிக்கப்படுவது நிறுத்தப்படுவது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் சவூதி மன்னரிடம் கலந்துரையாட வேண்டும் என குறித்த குழு வலியுறுத்தியுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg