Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

ஜனாதிபதி தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு (3ஆம் இணைப்பு)

In
Published: 04:31 GMT, Jul 17, 2017 |
0 Comments
1316
This post was written by : Varshini

susma

இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு, தமிழகத்தில் நிறைவடைந்துள்ளது.

காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகிய நிலையில், 12 மணிக்குள் தமிழகத்தில் வாக்களிப்பு நிறைவுபெற்றது. இதில் 234 நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

அத்துடன், உடல் நலக்குறைவு காரணமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வாக்களிக்கவில்லை. ஏனைய பகுதிகளில் தொடர்ந்தும் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது.

ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் – முதலமைச்சர் வாக்களிப்பு (2ஆம் இணைப்பு)

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்குப் பதிவு மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

வாக்களிப்பு காலை 10 மணிக்கு ஆம்பமாகியுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தமது வாக்குகளை பதிவுசெய்து வருகின்றனர்.

குறிப்பாக நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் பிரதர் நரேந்திர மோடி தனது வாக்கினை பதிவுசெய்துள்ளார்.

அத்தோடு, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால், தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தமது வாக்குகளை பதிவு செய்தனர்.

மாலை 5 மணிவரை நடைபெறும் தேர்தலில், நாடு முழுவதிலும் 776 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 4,120 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

modi-7599

india election voting staline voting

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார்? – இன்று வாக்குப் பதிவு

இந்தியாவின் 14ஆவது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு, இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் எதிர்வரும் 24ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தலை இன்று நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணையகம் வலியுறுத்தியிருந்தது.

இத் தேர்தலில், ஆளும் பாரதிய ஜனதா கூட்டணியின் வேட்பாளராக ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மீரா குமாரும் போட்டியிடுகின்றனர்.

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்திலும், தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள சட்டசபை வளாத்திலும், அதேபோன்று பிற மாநிலங்களில் உள்ள சட்டசபை வளாகங்களிலும் மொத்தமாக 32 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

காலை 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ள வாக்குப்பதிவு, மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளதோடு 33 மேற்பார்வையாளர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலுடன் இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரும் ஆரம்பமாகின்ற நிலையில், வாக்குச் சாவடிகள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்கும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாக்குச் சீட்டு பச்சை நிறத்திலும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான வாக்குச்சீட்டு இளஞ்சிவப்பு நிறத்திலும் அச்சிடப்பட்டுள்ளன.

அத்தோடு, வாக்காளர்கள் பயன்படுத்துவதற்கென தொடர் எண்களைக் கொண்ட பிரத்தியேக பேனாவை தேர்தல் ஆணையகம் வழங்குகிறது. அரியானா மாநிலத்தில் கடந்த வருடம் நடைபெற்ற, டெல்லி மேற்சபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட பேனா மையினால் ஏற்பட்ட சர்ச்சையால் இம்முறை இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வாக்கெண்ணும் பணிகள் எதிர்வரும் 20ஆம் திகதி காலை 11 மணிக்கு ஆரம்பமாகி, அன்றைய தினமே முடிவும் வெளியிடப்படும். புதிய ஜனாதிபதி எதிர்வரும் 25ஆம் திகதி பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)