Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

கண்டாவளை ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தை மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு(2ஆம் இணைப்பு)

In
Updated: 10:11 GMT, Jul 17, 2017 | Published: 05:37 GMT, Jul 17, 2017 |
0 Comments
1061
This post was written by : Vithushagan
20170717_094839

கிளிநொச்சி- கண்டாவளை ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொள்ளமல் புறக்கணித்திருந்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் தட்டுவன்கொட்டி பிரதேச மக்களிற்கு 17 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிவித்த  மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை மக்களுக்கு  தீர்வு வழங்கியதன் பின்னரே கூட்டத்தினை தொடர வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து குடிநீரை  அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்த பின்னர் கூட்டம் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

கண்டாவளை ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆரம்பம்!

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று (திங்கட்கிழமை)  காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சிவஞானம் சிறீதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இக் கூட்டத்தில், இவ்வாண்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைகளுக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

20170717_095251 20170717_095305 20170717_095322

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)