Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இளைஞர்களுக்கு பயிற்சியளித்த தீவிரவாதிகள் கைது

In இந்தியா
Updated: 09:53 GMT, Jul 17, 2017 | Published: 06:42 GMT, Jul 17, 2017 |
0 Comments
1317
icon_com
This post was written by : Kemasiya
images (1)

ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாத முகாம் அமைத்து இளைஞர்களுக்கு பயிற்சியளித்து வந்த ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் நான்கு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று பாரமுல்லா மாவட்டத்தில் இளைஞர்களுக்கு பயிற்சியளித்த 3 தீவிரவாதிகளையும் கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் இராணுவ வீரர்களுக்கு எதிராக இளைஞர்கள் கல்வீச்சுக்களை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு இராணுவத்தினருக்கு எதிராக செயற்படும் இளைஞர்களை தீவிரவாதிகள் தம் பக்கம் எடுத்து பயிற்சியளித்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் பயிற்சி பெறும் இளைஞர்களை பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாமுக்கு அனுப்பி வைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகவும் குறித்த பொலிஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg