Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோசூலை கட்டியெழுப்புவதில் பெரும் சவாலை எதிர்நோக்கும் ஈராக்

In உலகம்
Published: 09:13 GMT, Jul 17, 2017 |
0 Comments
1292
icon_com
This post was written by : Risha

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த ஈராக்கின் மோசூல் நகர் தற்போது படையினரால் மீட்கப்பட்டுள்ள நிலையில், நகரை மீண்டும் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் பெரும் சவாலை எதிர்நோக்கி வருகிறது.

போரினால் பேரழிவை எதிர்நோக்கிய பகுதிகளில் மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், பாதுகாப்பை உறுதிபடுத்துவதே மிகப்பெரிய சவாலாக காணப்படுகிறது.

நகரை சீரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், குடிநீர் மற்றும் சுத்திகரிப்பு குழாய்களை புனரமைக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

மோசூலை கட்டியெழுப்பும் இராணுவத்தின் முயற்சிக்கு ஷியா போராளிகள் தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், இது நகரை கட்டியெழுப்புவதற்கான ஆதரவே தவிர இராணுவத்திற்கான ஆதரவல்ல என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg