Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்ச்சைக்கு மத்தியில் பிரித்தானிய விஜயம் அமையாது: ட்ரம்ப்

In
Updated: 12:55 GMT, Jul 17, 2017 | Published: 12:54 GMT, Jul 17, 2017 |
0 Comments
1151
icon_com
This post was written by : Risha
trum

தனது பிரித்தானிய விஜயம் தொடர்பில் சர்ச்சைகள் நிலவி வருகின்ற நிலையில், சர்ச்சைகளுக்கு மத்தியில் தனது பிரித்தானிய விஜயம் மேற்கொள்ளப்படாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ள போதிலும், அதனை அவசரமாக முன்னெடுக்க போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முறையான வரவேற்பு அளிக்கப்படும் என உறுதிசெய்யப்படுமாயின் விரைவில் தனது பிரித்தானிய விஜயம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ட்ரம்ப், பிரித்தானியாவில் மிகவும் செல்வாக்கற்றவராக விளங்கும் அதேவேளை, பிரித்தானியாவில் அவரது வருகையை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg