Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

மன்னார் கருசல் பகுதியில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

In
Published: 15:23 GMT, Jul 17, 2017 |
0 Comments
1420
This post was written by : Ravivarman
DSC_0020

மன்னார் கருசல் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினையடுத்து கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த மூன்று சந்தேக நபர்கள் உட்பட 8 பேரையும் எதிர்வரும் 31 ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.

மன்னார் நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) மாலை ஆஜர் செய்யப்பட்ட பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்த சந்தேக நபர்களுக்கே மன்னார் நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக மன்னார் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் அண்மையில் கரிசல் புனித கப்பலேந்தி மாதா ஆலய காணி எல்லைகள் இடப்பட்டு சுற்று வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் நீதிமன்ற பதிவாளர் குறித்த இடத்தில் இருந்து சென்றபின்னர் பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக இடையூறுகளை மேற்கொண்டு வந்ததோடு, அமைக்கப்பட்ட சுற்று வேலிக்கான தூண்களை கடமையில் இருந்த பொலிஸார் முன்னிலையில் உடைத்து சேதப்படுத்தியிருந்தமையால் குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC_0043

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)