Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குடியரசுத் துணைத்தலைவராக வெங்கய்ய நாயுடு இன்று வேட்புமனுத்தாக்கல்

In இந்தியா
Published: 04:35 GMT, Jul 18, 2017 |
0 Comments
1202
icon_com
This post was written by : Varothayan
venkaiah naidu

இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில் பா.ஜ.க.வின் மூத்த உறுப்பினரும் மத்திய அமைச்சருமான வெங்கய்ய நாயுடு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யவுள்ளார்.

கடந்த 10 வருடங்களாக இந்தியக் குடியரசுத் துணைத்தலைவராக இருக்கும் ஹமீட் அன்சாரியின் பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், ஓகஸ்ட் 5ஆம் திகதி அப்பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையிலேயே வெங்கய்ய நாயுடு ஆளும் பா.ஜ.க. கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, இந்தத் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் மகாத்மா காந்தியின் பேரனும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபால கிருஷ்ண காந்தி அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க. கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத்தலைவர் வேட்பாளராக தாம் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தனது பதவியை நேற்று ராஜினாமை செய்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg