Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உயிரிழந்த இராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி (2ஆம் இணைப்பு)

In இந்தியா
Updated: 09:21 GMT, Jul 18, 2017 | Published: 08:47 GMT, Jul 18, 2017 |
0 Comments
1179
icon_com
This post was written by : Varothayan
201707080935231696_JK-Two-of-a-family-killed-as-Pakistan-violates-ceasefire_SECVPF

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராஜோரி என்ற இடத்தில் நேற்று பாகிஸ்தான் இராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் நாயக் முடஸார் அகமது என்ற இராணுவ வீரர் உயிரிழந்திருந்தார்.

அவரது உடலுக்கு இராணுவ அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில், பாகிஸ்தான் இராணுவத்தின் தாக்குதலில் இந்த மாதத்தில் இதுவரை நான்கு இராணுவ வீரர்களும், 3 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தினர் நேற்று (திங்கட்கிழமை) அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இந்திய இராணுவ வீரர் ஒருவரும் சிறுமி ஒருவரும் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச், ரஜௌரி, பாராமுல்லா மாவட்டங்களில் உள்ள இந்திய இராணுவ முகாம்கள் மீது நேற்றுக் காலை பாகிஸ்தான் இராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி கொடுக்க இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு என்று பாகிஸ்தானுக்கு இந்திய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்றைய தாக்குதல் இடம்பெற்று 3 மணி நேரங்களின் பின்னர் இந்திய இராணுவ நடவடிக்கைகளுக்கான தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.பட், பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கைகளுக்கான தலைவருடன் தொலைபேசியில் பேசிய போதே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg