Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு முதலமைச்சரை சந்தித்தார் சிங்கப்பூர் அமைச்சர் (3ஆம் இணைப்பு)

In இலங்கை
Published: 04:41 GMT, Jul 19, 2017 |
0 Comments
1393
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன்போது வடக்கின் தற்போதைய நிலவரங்கள், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல்  மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

singapore minister meets northern CM (5) singapore minister meets northern CM (3) singapore minister meets northern CM (1) singapore minister meets northern CM (2)

யாழ். பொது நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்கள் (2ஆம் இணைப்பு)

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், யாழ். பொது நூலகத்திற்குச் சென்று ஒரு தொகுதி நூல்களை கையளித்துள்ளார்.

அத்தோடு, அங்குள்ளவர்களுடன் கலந்துரையாடியதோடு, நூலகத்தைச் சுற்றி பார்வையிட்டார்.

அதற்கு முன்னதாக யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்ற சிங்கப்பூர் அமைச்சர், வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியுடன் கலந்துரையாடினார். அத்தோடு, நோயாளர்களையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து, பிற்பகல் 2 மணியளவில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் முக்கிய சந்திப்பொன்றில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

viviyan balakrishnana in jaffna hospital (4)

viviyan balakrishnana in jaffna hospital (2) viviyan balakrishnana in jaffna hospital (1) viviyan balakrishnana in jaffna hospital (3)

வடக்கு ஆளுநருடன் சிங்கப்பூர் அமைச்சர் சந்திப்பு

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட குழுவினர், வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரேயுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் தற்போது இடம்பெற்று வரும் இச் சந்திப்பில், ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோவனும் கலந்துகொண்டுள்ளார்.

குறித்த சந்திப்பை தொடர்ந்து யாழ். பொது நூலகத்திற்கு விஜயம் செய்யும் சிங்கப்பூர் அமைச்சர், அங்கு ஒருதொகுதி நூல்களை கையளிக்கவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழகத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார். இதன்போது யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பிரிவை சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் திறந்துவைப்பார்.

தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திக்கவுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர், வடக்கின் தற்போதைய சூழல் மற்றும் சமகால அரசியல் நிலவரம் குறித்தும் கலந்துரையாடவுள்ளார்.

viviyan balakrishnana meets northern governor (2)

viviyan balakrishnana meets northern governor (1)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg