Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை இரத்து செய்யக்கோரி போராட்டம்

In இந்தியா
Published: 05:07 GMT, Jul 19, 2017 |
1 Comment
1232
icon_com
This post was written by : Elakkiya

மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் தமிழக அரசின் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத் திருத்தத்தை இரத்து செய்யக் கோரி இன்று (புதன்கிழமை) இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் மீனவர்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாட்டு கடலில் மீன்பிடித்தலை முறைப்படுத்தும் தமிழக அரசின் குறித்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நாட்டு படகு மீனவர்கள் மூன்று கடல் மைல்களுக்கு அப்பால் மீன் பிடிக்க வேண்டும், பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மீன்பிடிக்க தடை உள்ளிட்ட விதிமுறைகளுக்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த எதிர்ப்பு போராட்டத்தில் சட்ட நகல் கிழித்து எறியப்பட்டது.

அத்துடன், மீனவர்களை கடலைவிட்டு அப்புறபடுத்தாதே, படகுகளை பதிவு செய்ய வணிக கப்பல் சட்டத்தை திணிக்க வேண்டாம், மாநில வாரியாக மீன்பிடி படகுகளுக்கு தனியான பதிவுச் சட்டம் இயற்றப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் மீனவர்கள் சார்பில் முன்வைக்கப்பட்டது.

அத்துடன், பெரு நிறுவனங்களிடமிருந்து மாத்திரமே படகுகளை வாங்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்யாதே, மீன்பிடி துறைமுகங்களை தனியார் மயமாக்காதே போன்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இதன்போது கருத்து தெரிவித்த மாநில பொதுச்செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல், 2016 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மேற்படி தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரகாரம் நாட்டுப்படகு மீனவர்கள் முற்றாக அழிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அதேவேளை விசைப்படகுகளுக்கு ஆதரவாக இந்த சட்டமூலம் இயற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல், மாவட்ட செயலாளர் எம்.கருணாமூர்த்தி, மாவட்ட பொருளாளர் என்.பி.செந்தில், தமிழ்நாடு மீன்பிடி தொழில்சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள், மாதர் சங்க மாவட்ட தலைவர் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg
  1. சி. ஆர்.செந்தில்வேல்