Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கு: ஐவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு

In இந்தியா
Updated: 09:37 GMT, Jul 19, 2017 | Published: 09:36 GMT, Jul 19, 2017 |
0 Comments
1172
icon_com
This post was written by : Elakkiya
05-1493952643-kodanad3456

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஐவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சியாளர் திவ்யாவினால் இந்த உத்தரவு பிறப்பட்டுள்ளதுடன் இது குறித்த அறிவித்தல்கள் சிறைச்சாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த திபு, சதீஷன், உதயகுமார், மனோஜ், குட்டி மற்றும் பிஜின் ஆகிய ஐவரையும் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணத்தின் பின்னர் கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி நள்ளிரவு கொடநாடு எஸ்ரேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். அத்துடன் குறித்த எஸ்டேட்டில் கொள்ளை சம்பவமும் இடம்பெற்றிருந்தது.

சம்பவம் குறித்து 11 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், கனகராஜ் எனப்படும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் சாரதி வீதி விபத்தில் உயிரிழந்தார். அதனையடுத்து ஏனைய பத்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg