Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமைச்சர் ரிஷாத் உடனடியாகப் பதவி விலக வேண்டும்: சாகர தேரர்

In இலங்கை
Published: 05:45 GMT, Jul 21, 2017 |
0 Comments
1474
icon_com
This post was written by : Ravivarman
Untitled

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என பாகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள சதொச களஞ்சியசாலைக்கு கொண்டுவரப்பட்ட பாரவூர்தியில் இருந்து போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குறித்த சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ள நபர்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்துவதற்காக அமைச்சர் பதவி விலக வேண்டும். மேலும் மீட்கப்பட்டுள்ள கொகேய்ன் போதைப்பொருள் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது எமக்கு சந்தேகம் உள்ளது.

இவ்விடயத்தினை வெளிப்படுத்துவதால் எனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தாலும் பிரச்சினை இல்லை.நான் கொலை செய்யப்பட்டாலும் உண்மை உலகுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும்” என பாகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg