Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடக்கு முறையினைத் தொடர இனிமேல் அனுமதிக்க முடியாது : ஞானந்த தேரர்

In இலங்கை
Published: 12:18 GMT, Jul 21, 2017 |
0 Comments
1135
icon_com
This post was written by : Puvanes

கொலைகளில் ஈடுபட்ட நபர் பிரதமராகவும், கொலைக்குழுக்களுக்கு தலைமை வகித்த நபர்கள் அமைச்சு பதவிகளிலும் அமர்ந்துள்ள நிலையே தற்போது நாட்டில் காணப்படுகின்றது என சைட்டம் எதிர்ப்பு அமைப்பின் உறுப்பினரான ஞானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், பல்கலைக்கழக மாணவர்களின் மீதான அடக்கு முறைக்கு எதிராக மக்கள் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய சூழலில் பல்கலைக்கழக மாணவர்களுடன் தொழிற்சங்கங்களும் இணைந்துள்ளன இதனால் அரசாங்கத்திற்கு அடக்கு முறையினை தொடர்வதற்கு இனிமேல் அனுமதி அளிக்கப்படாது எனவும் ஞானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மக்களுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை தாம் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg