Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொடுக்குளாய் – இயக்கச்சி அபாய வெளியேற்றப் பாதை திறப்பு!

In இலங்கை
Updated: 12:59 GMT, Jul 21, 2017 | Published: 12:56 GMT, Jul 21, 2017 |
0 Comments
1106
icon_com
This post was written by : Vithushagan
Vadamaratchchi02

வடமராட்சி கிழக்கில் மக்களின் 7.8 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் 12 மில்லியன் ரூபா நிதியில் புனரமைப்புச் செய்யப்பட்ட கொடுக்குளாய் – இயக்கச்சி அபாய வெளியேற்றப் பாதை இன்று(வெள்ளிக்கிழமை)  திறந்து வைக்கப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்  அனுர பிரியதர்சன ஜாப்பா மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரால் இவ்வீதி சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் உள்ள கிராமங்களில் வாழும் மக்களிற்கு அபாய நிலையின் போது வெளியேறுவதற்கு உரித்தான வீதி மிக நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் இருந்தது.

குறித்த வீதியை புனரமைப்புச் செய்வதற்கு யாழ்.மாவட்ட அனர்த முகாமைத்துவ பிரிவினால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவ்வீதி அமைப்புக்கான நிதி ஒதுக்கப்படவில்லை.

எனினும் இது குறித்து  அனர்த முகாமைத்துவ பிரிவினாலும், அப்பகுதி மக்களினாலும் சுட்டிக்காட்டப்பட்டது இருப்பினும் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டியவர்கள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் அப்பிரதேசத்தில் இருந்து புலம்பெயர் நாடுகளில் வசித்து வருபவர்களுடைய பங்களிப்புடன் குறித்த வீதி அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

Vadamaratchchi01

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg