Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னாரில் விபத்து: பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு!

In இலங்கை
Published: 15:46 GMT, Jul 21, 2017 |
0 Comments
1552
icon_com
This post was written by : Vithushagan
mannar accdent (1)

மன்னார் – நானாட்டான் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் நானாட்டான் பகுதியில் நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த றெக்ஸ் கமில்டன் என்ற 27 வயது பல்கலைக்கழக மாணவரே உயிரிழந்துள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதன்போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் ஒரு இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

mannar accdent (3)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg