Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸ் திணைக்களத்தில் உள்ள மஹிந்தவின் ஆதரவாளர்களே சூழ்ச்சி செய்கின்றனர்: மங்கள சாடல்

In இலங்கை
Published: 09:32 GMT, Jul 22, 2017 |
0 Comments
1163
icon_com
This post was written by : Anojkiyan
mangala

அனைத்துப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தை வெள்ளை வானைக் கொண்டு கடத்தல் பாணியில் கைதுசெய்ய முயற்சித்தமை பொலிஸ் திணைக்களத்தில் உள்ள மஹிந்தவின் ஆதரவாளர்களே மேற்கொண்டனர் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் மங்கள சமரவீரவிடம், கடந்த காலங்களில் வெள்ளைவான் கலாசாரத்திற்கு எதிராக குரல்கொடுத்தவர் என்ற வகையில் மருத்துவ பீட மாணவர்கள் வெள்ளைவானில் கடத்திச் செல்ல முயன்றதை அனுமதிக்கின்றீர்களா என ஊடகவிலாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“இந்த சம்பவத்தை நான் கண்டிக்கின்றேன். கண்டனம் வெளியிடுவது மட்டுமல்ல. பொலிஸ் மா அதிபருக்கு தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு என்ன இவ்வாறு செய்கின்றீர்கள் என வினவினேன். பொலிஸ் திணைக்களத்திலுள்ள சில நபர்களால் அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் ஒரு சதித் திட்டமாகவே நான் இதனைப் பார்க்கின்றேன். நேற்று பகல் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சட்டத்தில் ஜனாதிபதி கையெழுத்திடுகின்றார்.

ஜனாதிபதி கையெழுத்திட்ட ஒரு சில மணித்தியாலங்களுக்குள் இவ்வாறு நடைபெறுவதில் எனக்கு சந்தேகம் உள்ளது. எனினும் இந்த விடயம் தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பொலிஸ் மா அதிபர் உறுதி அளித்துள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம் ரயன் ஜயலத்தை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட என்.ஏ 0410 என்ற ஹைஏஸ் கே.டி.எச் ரக வெள்ளை வான் நிதி அமைச்சுக்கு சொந்தமானது என சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் வரிச் சலுகையின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனமே இந்த கடத்தல் பாணியிலான கைதுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது” என கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg