Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேல் மாகாணத்தில் பொலிஸ், இராணுவம் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு!

In இலங்கை
Updated: 11:15 GMT, Jul 22, 2017 | Published: 11:15 GMT, Jul 22, 2017 |
0 Comments
1337
This post was written by : Ravivarman

மேல் மாகாணத்தில் சட்டவிரோதமான முறையில் குப்பை கொட்டிய 217 பேரை பொலிஸார் இன்று (சனிக்கிழமை) கைது செய்துள்ளனர்.

பொலிஸ் மற்றும் இராணுவம் என்பன இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, நுகேகொடை, கல்கிஸ்ஸை, கம்பஹா, களனி மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளிலிருந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg