Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெள்ளை மாளிகை விருந்துக்காக அமெரிக்கா விரைகிறார் லெபனான் பிரதமர்!

In
Updated: 06:00 GMT, Jul 23, 2017 | Published: 06:00 GMT, Jul 23, 2017 |
0 Comments
1321
This post was written by : Anojkiyan

லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரி நாளை மறு தினம் (செவ்வாய்க்கிழமை) அமெரிக்காவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப், அமெரிக்கா வருமாறு விடுத்த அழைப்புக்கு இணங்கவே அவர் அங்கு செல்லவுள்ளார். இதனை அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை உறுதிசெய்துள்ளது.

இதன்போது லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரிக்கு வொஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விருந்து அளிக்கிறார்.

இந்த சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் தீவிரவாதத்தை ஒழிப்பது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அகதிகள் மறுவாழ்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துவார்கள் என அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg