Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2020 ஆம் ஆண்டு வரை பிரதமர் மே பதவியில் இருப்பார்: கிறிஸ் கிரெய்லிங்

In
Updated: 08:20 GMT, Jul 24, 2017 | Published: 09:35 GMT, Jul 23, 2017 |
0 Comments
1490
icon_com
This post was written by : Sylviya
11

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு வரை பதவியில் இருக்கலாம் எனவும் சில வேளைகளில் அதன் பிறகு நடத்தப்படும் தேர்தலிலும் போட்டியிடலாம் எனவும் போக்குவரத்து அமைச்சர் கிறிஸ் கிரெய்லிங் (Chris Grayling) தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு நேற்று (சனிக்கிழமை) அளித்த செவ்வியொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் உரையாற்றுகையில், “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகி விட்டால் பிரதமர் மே தொடர்ந்தும் பதவியில் இருப்பார் என்பதற்கு அதிகளவான சாத்தியக்கூறுகள் உண்டு. அத்துடன் கொன்சர்வேற்றிவ் கட்சியின் ஆதரவு அவருக்கு உண்டு என்பதால் அதற்கான வாய்ப்பு அதிகம்” என தெரிவித்தார்.

பிரெக்சிற் விவகாரத்தில் சிறந்த தலைமை ஒன்று தேவை என்பதால் பிரதமர் மே முன்கூட்டிய பொதுத் தேர்தல் வேண்டும் என அறிவித்தார். குறித்த அறிவிப்பு பலரை வியப்புக்குள்ளாக்கியது.

இருப்பினும், கடந்த ஜூன் மாதம் 08 ஆம் திகதி நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சி பெரும்பான்மை ஆசனங்களைப் பெறத் தவறியது.

அதனைத் தொடர்ந்து, வடக்கு அயர்லாந்தின் ஜனநாயக ஒன்றியக் கட்சி மற்றும் கொன்சர்வேற்றிவ் கட்சி ஆகியன இணைந்து உடன்படிக்கை ஒன்றினை எட்டின.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg