Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜய், அஜித் இரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!

In சினிமா
Updated: 14:17 GMT, Jul 25, 2017 | Published: 10:56 GMT, Jul 25, 2017 |
0 Comments
1490
icon_com
This post was written by : Vithushagan
201707221209486018_Huge-Treats-For-Ajith-And-Vijay-Fans_SECVPF

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள `விவேகம்’ படமும், அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் `மெர்சல்’ படமும் இந்த ஆண்டு வெளியாக இருக்கின்றது.

`விவேகம்’ ஒகஸ்ட் 10ஆம் திகதியும் `மெர்சல்’ தீபாவளியை முன்னிட்டும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரு படங்களுக்குமான வெளியாகும் திகதி  நெருங்கி வருவதால், இந்த படங்கள் குறித்த புதுப்புது தகவல்கள் அவ்வப்போது இணையதளங்களை கலக்கி வருகிறது.

அந்த வகையில், கடந்த 20ஆம் திகதி வெளியான `விவேகம்’ படத்தின் “காதலாட” பாடலின் பாடல் வரிகள் வீடியோவாக இணைதளங்களில் வெளியிடப்பட்டது.

அதேநேரத்தில் நேற்று ஆடி வெள்ளி என்பதால், விஜய்யின் `மெர்சல்’ படம் குறித்த புதிய தகவல் ஒன்றும் வெளியாகும் என்று தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி `மெர்சல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஒகஸ்ட் 20ஆம் திகதி நடைபெறும் என்று அறிவித்தது.

அது முதல் விஜய் மற்றும் அஜித் இருவரது இரசிகர்களும் டுவிட்டரில் போஸ்டுகளை போட்டு இரு படங்களையும் டிரெண்டாக்கி வருகின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg