Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நயன்தாரா!

In சினிமா
Updated: 05:53 GMT, Jul 24, 2017 | Published: 05:53 GMT, Jul 24, 2017 |
0 Comments
1268
This post was written by : Surenth

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் திலீப்குமாரின் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார்.

ஷங்கர் – ரஜினி இணையும் ‘2.0’ மற்றும் விஜய் இயக்கத்தில் ‘கரு’ ஆகிய திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது லைகா நிறுவனம். இவ்விரண்டு திரைப்படங்களைத் தொடர்ந்து, இந்த திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

வித்தியாசமான கதைக்களம் கொண்ட இக்கதை முழுக்க நாயகியை மையமாக கொண்ட கதையாகும். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு ‘கோ கோ’ என தலைப்பிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது இந்த திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg