Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கரடியனாறு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்: உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டார் (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Published: 10:14 GMT, Jul 24, 2017 |
0 Comments
1275
icon_com
This post was written by : Ravivarman

gun

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கொம்மாதுறை 10ஆம் கட்டை வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய சதாகரன் மதுஷன் என்ற இளைஞன் உயிழந்துள்ளார்.

அத்துடன், 18 வயதுடைய அவரது சகோதரன் சதாகரன் கிஷாந்தன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

முந்தன்குமாரவெளி ஆற்றிலிலிருந்து உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த வேளை அப்பகுதிக்கு வந்த விஷேட அதிரடிப்படையினர் மணல் ஏற்றியவர்களை விரட்டிச்சென்ற போது ஆற்றில் குதித்து தப்பியோட முயற்சித்தபோதே குறித்த நபர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் விஷேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், தப்பிச் செல்ல முயன்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தன்குமாரவெளி ஆற்றில் இன்று (திங்கட்கிழமை) சட்டவிரோதமாக ஆற்றுமணல் ஏற்றியவர்கள் மீதே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது தப்பிச் செல்லும்வேளை ஆற்றில் குதித்த நபர்களில் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றுமொருவர் செங்கலடிப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg