Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வுகள் மக்களைச் சென்றடைவதில்லை: அனுஷியா ஸ்ரீசங்கர்

In இலங்கை
Updated: 12:47 GMT, Jul 24, 2017 | Published: 12:47 GMT, Jul 24, 2017 |
0 Comments
1317
This post was written by : Ravivarman

நகரப் புறங்களை விட கிராம மக்களுக்கு எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வுகள் சென்றடைவதில்லை என மட்டக்களப்பு மாவட்ட பாலியல் பரிமாற்ற நோய் மற்றும் எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டு பொறுப்பு வைத்தியர் அனுஷியா ஸ்ரீசங்கர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலியல் பரிமாற்ற நோய், மற்றும் எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டு செயற்திட்டங்கள் குறித்து ஊடகவியலாளர்களிற்கு விளக்கமளிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எயிட்ஸ் நோய் வந்த பின் அவஸ்தைப்படுவதை விட வராமல் தடுப்பதற்கு ஏற்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதில் அரச அலுவலகங்களின் நிர்வாக மட்டத்தில் பணிபுரியும் களப்பணி அலுவலர்கள் கரிசனை காட்ட வேண்டும்.

எயிட்ஸ் ஒரு உயிர்க் கொல்லி நோய் என்ற பயத்தையும் தாண்டி அதனை வராமல் தடுப்பதற்கும் வந்த பின் அது பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கும் மக்களிடையே விழிப்புணர்வு அவசியமானது.

இரத்தப் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் எயிட்ஸ் தொற்று அடுத்தவருக்கு பரப்பப்படாமல் இருப்பதையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் கிராம மக்களிடம் ஊக்குவிப்பதே எமது விழிப்பூட்டலின் நோக்கம்.

எயிட்ஸ் ஆட்கொல்லி நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதில் மருத்துவ உலகம் தற்போது முன்னேறியிருக்கின்றது” என வைத்தியர் அனுஷியா ஸ்ரீசங்கர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg