Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மலையகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்ட ஆடிப்பூரம்

In ஆன்மீகம்
Published: 10:20 GMT, Jul 26, 2017 |
0 Comments
1949
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

இந்துக்களின் முக்கிய விதங்களுள் ஒன்றான ஆடிப்பூரம் இன்றாகும். அம்மனுக்கு உகந்த விரதமாக கருதப்படும் இவ் விரதத்தை, உலகலாவிய ரீதியில் வாழும் இந்துக்கள் இன்று (புதன்கிழமை) அனுஷ்டித்து வருகின்றனர்.

குறிப்பாக, இலங்கையில் ஹட்டன் வில்பிரட்புர அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில், பெருந்திரளான அடியார்களின் பாற்குட பவனி இடம்பெற்றதோடு, விசேட பூஜைகளும் இடம்பெற்றன.

பாற்குட பவனியானது, ஆலயத்திலிருந்து புறப்பட்டு ஹட்டன் பிரதான வீதியினூடாக மணிகூட்டு கோபுரம் வரை சென்று மீண்டும் இரண்டாவது பிரதான வீதியினூடாக ஆலயத்தை வந்தடைந்தது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

ஆடி மாதத்தில் ஆடிப் பெருக்கை தொடர்ந்து ஆடிப்பூர விழா கொண்டாடப்படும். இதில் அம்மனுக்கு ஆடை முதல் அணிகலன் வரை சீர்வரிசையாக கொண்டு செல்லப்பட்டு பக்தி உணர்வுடன் அவற்றை அம்மனுக்கு சாத்தி, சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

adi pooram (1) adi pooram (2) adi pooram (3) adi pooram (5) adi pooram (6)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg