Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கேப்பாப்பிலவு காணிகளை விடுவிக்க கால அவகாசம்!

In இலங்கை
Updated: 06:10 GMT, Jul 27, 2017 | Published: 02:56 GMT, Jul 27, 2017 |
0 Comments
1626
This post was written by : Varshini

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான பிரச்சினைக்கு, இன்னும் 10 நாட்களில் உரிய பதிலை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்ற அமைச்சில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, கேப்பாப்பிலவு மக்கள் சார்பில் கலந்துகொண்டிருந்த பிரதிநிதிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த காணிகளில் நிலைகொண்டுள்ள ராணுவம் அங்கிருந்து செல்ல இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்குமாறும் இச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கோரினார்.

எனினும், மக்கள் பிரதிநிதிகள் அதனை ஏற்றுக்கொள்ளாத நிலையில், இன்னும் 10 நாட்களில் உரிய பதிலை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

கேப்பாப்பிலவு மக்களின் பூர்வீக காணிகளை அரசாங்கம் விடுவிக்க வேண்டுமென கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு படைகளின் பிரதானி உள்ளிட்ட அரசாங்கத்தின் உயரதிகாரிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கடிதம் அனுப்பியிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

SAMPANTHAN MET KEPAPILAVU REP (2) SAMPANTHAN MET KEPAPILAVU REP (3)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg