Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிலிப்பைன்ஸ் நாட்டவர் நியூசிலாந்தில் சுட்டுக்கொலை!

In உலகம்
Updated: 08:39 GMT, Jul 27, 2017 | Published: 08:39 GMT, Jul 27, 2017 |
0 Comments
1913
This post was written by : Sylviya

நியூசிலாந்துக்கு சென்ற பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம், நேற்று (புதன்கிழமை) நியூசிலாந்தின் பிலிரான் மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 06.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைமன் ரோலின்சன் (வயது 63) எனும் நபரே மேற்படி கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களை கொண்டுவருவோருக்கு 1600 அமெரிக்க டொலர்கள் வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் நகர மேயர் ஜெராட் தெரிவித்துள்ளார்.

இதே வேளை, குறித்த கொலை சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg