Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெனிசுவேலாவில் தேர்தலை குழப்பும் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை

In உலகம்
Updated: 06:54 GMT, Jul 28, 2017 | Published: 06:54 GMT, Jul 28, 2017 |
0 Comments
1761
This post was written by : Elakkiya

வெனிசுவேலாவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை புதிய அரசியலமைப்பு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலை குழப்பும் அல்லது பாதிக்கும் வகையிலான ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தடை உத்தரவை மீறுவோருக்கு  ஐந்து முதல் பத்து வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என வெனிசுவேலா உள்துறை அமைச்சர் நெஸ்டர் ரெவரோல் தெரிவித்துள்ளார். இந்த தடை உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஆதரவை இழந்துள்ள வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடம்பெற்றுவரும் ஆர்பாட்டங்களினால் இதுவரை 100 ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

பொதுமக்களினதும் எதிர்க்கட்சிகளினதும் கோரிக்கைகளுக்கு மாறாக ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் விதத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்க ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ திட்டமிட்டு அதற்கான தேர்தலை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg