Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவையான கத்தரிக்காய் சாதம்

In
Published: 12:56 GMT, Jul 28, 2017 |
0 Comments
1241
icon_com
This post was written by : Kemasiya
DSC04923

தேவையான பொருட்கள்:

1. அரிசி – 1/4 கிலோ

2. பிஞ்சுக் கத்திரிக்காய் – 6

3. வெங்காயம் – 1

4. கடுகு – 1/4 தேக்கரண்டி

5. கரம் மசாலாத்தூள் – 1/2 தேக்கரண்டி

6. பச்சை மிளகாய் – 1

7. மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை

8. இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி

9. எண்ணெய் – தேவையான அளவு

10. உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. குக்கரில் ஒரு பங்கு அரிசிக்கு இரு பங்கு தண்ணீர் விட்டு 3 விசில் வந்ததும் இறக்கவும்.

2. கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் அதில் கடுகு போட்டுத் தாளிக்கவும்.

3. அதனுடன் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

4. பிறகுஇ நறுக்கிய கத்திரிக்காய் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டுக் கலந்து வதக்கவும்.

5. கத்திரிக்காய் வெந்து மணம் வந்ததும் இறக்கவும்.

6. இந்தக் கலவையில் சூடான சாதத்தை மசித்துக் கலக்கவும்

குறிப்பு: இச்சாதத்துடன் நல்லெண்ணெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடச் சுவையாக இருக்கும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg