Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட கொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு சீனாவும் ரஷ்யாவுமே காரணம்: அமெரிக்கா சாடல்

In உலகம்
Published: 05:04 GMT, Jul 30, 2017 |
0 Comments
1625
icon_com
This post was written by : Anojkiyan
RTS18UQY-1024x683

உலகநாடுகளை அச்சுறுத்திவரும் வட கொரியாவின் செயற்பாடுகளுக்கு சீனாவும் ரஷ்யாவுமே காரணம் என அமெரிக்கா கடுமையாக சாடியுள்ளது.

வட கொரியா, புதிய கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணையை சோதனை செய்ததன் பின்னணியில் அமெரிக்கா இதை கூறியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் வெளியிட்ட அறிக்கையில், ” வின் ஏவுகணை சோதனைகள் பிராந்திய நாடுகள் மற்றும் உலக நாடுகளின் ஸ்திரதன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து வருவதற்கு ரஷ்யாவும், சீனாவுமே முக்கிய காரணம்” என்று கூறப்பட்டுள்ளது.

வட கொரியா, நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) ஜப்பான் கடல் பகுதியில் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணையை சோதனை செய்தது. குறித்த ஏவுகணை அமெரிக்காவை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது என வடகொரியா தெரிவித்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg