Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் இன்று

In சினிமா
Published: 05:15 GMT, Jul 30, 2017 |
0 Comments
1390
icon_com
This post was written by : Kemasiya
download (4)

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தெரிவு செய்யும் தேர்தல் இன்று சென்னை வடபழநியில் உள்ள இசை அமைப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இரண்டு வருடத்துக்கு ஒரு முறை இயக்குநர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடப்பது வழமை. அந்த வகையில் ஏற்கனவே உள்ள நிர்வாகிகளின் பதவிக்காலம் நிறைவடைகின்றமையினையொட்டி புதிய நிர்வாகிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறுகின்றது.

குறித்த தேர்தல் காலை 8 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். பின்னர் மாலை 6 மணிக்கெல்லாம் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலுக்கு மாவட்ட முன்னாள் நீதிபதி பாலசுப்ரமணியம் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதே வேளை இத்தேர்தலில் விக்ரமன் தலைமையில் புதுவசந்தம் என்ற அணியும், புதிய அலைகள் என்ற பெயரில் மற்றொரு அணியும் போட்டியிடுகிறது. தலைவர் பதவிக்குப் போட்டியிடும் விக்ரமன், செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ஆர்.கே செல்வமணிக்கு எதிராக, புதிய அலைகள் அணி வேட்பாளர்களை நிறுத்தவில்லை. சுயேச்சையாக இயக்குநர் ஈ.ராமதாஸ் போட்டியிடுகிறார்.

மேலும் 3400 உறுப்பினர்கள் கொண்ட தமிழ்நாடு இயக்குநர் சங்கத்தில் 2300 பேர் மட்டுமே வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். ஒருவர் மொத்தம் 17 பேருக்கு வாக்களிக்க வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg