Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டில் காலநிலையில் மாற்றம்!

In இலங்கை
Published: 05:59 GMT, Jul 30, 2017 |
0 Comments
1311
icon_com
This post was written by : Vithushagan
rain

நாட்டின் சில மாவட்டங்களில் அடுத்து வரும் 24 மணித்தியாலங்களில்  தொடர்ச்சியாக மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, காலி, களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, திருகோணமலை, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழைப் பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் தொடர்ச்சியாக வறட்சியான கால நிலை நிலவி வரும் நிலையில், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் நீர் மின் உற்பத்தியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg