Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அழகை மெருகூட்ட அப்பிள் தரும் பயன்கள்

In
Published: 09:35 GMT, Jul 30, 2017 |
0 Comments
1126
icon_com
This post was written by : Kemasiya
download (4)

ஒரு வேளை சாப்பாட்டிற்று பதிலாக ஒரு அப்பிள் மற்றும் பால் குடித்தாலே பல்வேறு நோய்கள் இல்லாமல் போய்விடும் என வைத்தியர்களே ஆலோசனை வழங்குகின்றனர். இந்த நிலையில் குறித்த அப்பிள் எமது உடலின் பல பாகங்களுக்கும் அழகை மெருகூட்டும் நடவடிக்கைக்கு பயன்படுத்த உதவுகின்றது.

அந்த வகையில் அப்பிளை கொண்டு உடலின் பாகங்களை எவ்வாறு அழகுபடுத்தலாம் என நோக்குவோம்.

சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபில்ஸ்பூன் அப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.

அப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.

அப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.

அப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வர எமக்கு தேவையான எதிர்பார்த்த அழகு விரைவாக கிடைத்த விடும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg