Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவின் நடவடிக்கை என்னை வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளது: ட்ரம்ப்

In உலகம்
Updated: 10:51 GMT, Jul 30, 2017 | Published: 10:19 GMT, Jul 30, 2017 |
0 Comments
1835
icon_com
This post was written by : Sylviya
11 - 1

வடகொரியா மீது அழுத்தங்களை ஏற்படுத்தும் வகையில் சீனா நடந்துகொள்ளவில்லை எனவும் அது தன்னை வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டிருந்த ட்ரம்ப், “வடகொரியாவின் நடவடிக்கைகளை பார்த்தும் சீனா எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவித்துள்ளார்.

வடகொரியாவால் அமெரிக்காவை எளிதில் தாக்கக்கூடிய வகையிலான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனை ஒன்று நடத்தப்பட்டதைத் தொடர்ந்தே ட்ரம்ப் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதே வேளை, நேற்று (சனிக்கிழமை) தென்கொரிய மற்றும் ஜப்பானிய போர் விமானங்களுடன் இணைந்து அமெரிக்காவின் போர் விமானங்களும் பயிற்சியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg