Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிங்கள மக்கள் அங்கிகரித்தால் மாத்திரமே தமிழர்களுக்கான தீர்வுகள்: வரதராஜப் பெருமாள்

In இலங்கை
Published: 17:01 GMT, Jul 30, 2017 |
0 Comments
1613
This post was written by : Ravivarman

சிங்கள மக்கள் அங்கிகரித்தால் மாத்திரமே தமிழ் மக்களுக்கான விசேட தீர்வுத் திட்டம் கிடைக்கும் நிலைமை காணப்படுவதாக முன்னாள் ஒன்றிணைந்த வட.கிழக்கின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று மாலை (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

”பெரும்பான்மை மக்களது அங்கீகாரத்துடனே தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் நிலை காணப்படுகின்றது.அவர்கள் மனது வைத்தால் மாத்திரமே சிறுபான்மையினரான தமிழர்களின் இனப்பிரச்சினைகள் குறித்து எந்த முடிவினையும் எடுக்கலாம்.

இதேவேளை மாகாணசபைகள் தங்களுக்குரிய அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்துவதுடன், அவற்றில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பல தீர்மானங்களைக் கொண்டு வரவேண்டும்” என முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg